Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி ரீச்சபிள், ஜெயலலிதா நாட்ரீச்சபிள்..! லியோனி கலகல



எப்போதும் மக்களுக்காக ரீச்சபிளில் உள்ளவர் கருணாநிதி. எப்போதும் நாட்ரீச்சபிளில் இருப்பவர் ஜெயலலிதா என்று திண்டுக்கல் லியோனி நகைச்சுவையாகப் பேசினார்.

இலவச செல்போன் வழங்கும் ஜெயலலிதாவால் சிம்கார்டு வழங்க முடியுமா?: திண்டுக்கல் லியோனி கேள்வி
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு சோழவந்தான் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி வாக்கு கேட்டு பேசுகையில், உங்கள் திண்டுக்கல் லியோனி வந்துள்ளேன். விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்திட, கல்விக்கடன் ரத்து செய்திட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்திட நீங்கள் ஆதரிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன்.

ஜெயலலிதா மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றியே எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பவர். தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் சொல்லும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படுவதில்லை. ஆனால் கருணாநிதி சொன்னதை செய்வார். சொல்லாததையும் செய்வார்.

இலவச செல்போன் வழங்குவதாக கூறியுள்ள ஜெயலலிதாவால் இலவச சிம்கார்டு கொடுக்க முடியுமா? இது எப்படி உள்ளது என்றால் மண மகனுக்கு சட்டையை கொடுத்து விட்டு வேட்டியை கொடுக்காமல் விடுவதுபோல் உள்ளது. எப்போதும் மக்களுக்காக ரீச்சபிளில் உள்ளவர் கருணாநிதி. எப்போதும் நாட்ரீச்சபிளில் இருப்பவர் ஜெயலலிதா. எனவே நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close