Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1 சி.எம்., 2 டி.சி.எம்...! -இது ராமதாஸின் அடடே அமைச்சரவை

சென்னை: பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் 2 துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) பதவி உருவாக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''50 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. இந்த 2 கட்சிகளின் ஊழல்களை மக்கள் மத்தியில் பா.ம.க. மிகச்சரியாக எடுத்துரைத்தது. இந்த 2 கட்சிகளால் தான் குறிப்பிட்ட சதவீத மக்கள் இன்னும் வாக்களிக்கவே விரும்பவில்லை.

இன்றைக்கு மாற்று அரசியலை முன் எடுத்து செல்லும் பா.ம.க. மீதும், முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அன்புமணி ராமதாசை மக்கள் ஆதரிக்க முன்வந்து இருக்கிறார்கள்.

மின்தடையால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டார்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையை உருவாக்குவோம். எங்கள் முதலமைச்சரே நேரடியாக முதலீட்டாளர்களிடம் பேசி, தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பார்.

பா.ம.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். மக்களுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவோம். பா.ம.க. வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக பதவியேற்கும்போது, 2 துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) பதவி உருவாக்கப்படும். ஒரு துணை முதல்வர் தென் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், மற்றொரு துணை முதல்வராக பெண் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைக்கின்றன. இதுவரை 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் பதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே பணத்தால் வாக்குகளை வாங்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. என்னுடைய வீடு அமைந்துள்ள திண்டிவனத்தில்கூட அந்த இரு கட்சிகளும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வந்துவிட்டன. அதனால் தான் பணத்தை அள்ளி வீசுகிறார்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் செயல்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close