Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலாம் பெயரை பயன்படுத்தலாம்..! பொன்ராஜுக்கு அனுமதி


 


தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் என்ற முறையில் அப்துல் கலாம் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த பொன்ராஜ் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே. முகமது முத்து மீரான் மரைக்காயர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், ‘தன் தம்பி அப்துல் கலாமுக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது. இந்த நிலையில், அப்துல்கலாமிடம் உதவியாளராக இருந்த பொன்ராஜ், கடந்த பிப்ரவரி மாதம் ‘அப்துல்கலாம் விஷன் இந்தியா’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

அந்த கட்சியின் கொடியில், அப்துல்கலாம் படம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்துல்கலாம் பெயர், புகைப்படம் மற்றும் கட்சியை நடத்த வி.பொன்ராஜ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ‘அப்துல்கலாம் விஷன் இந்தியா என்ற கட்சிக்கும், அப்துல் கலாமின் பெயர், புகைப்படம் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்க கோரி பொன்ராஜ் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், உயர் நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடை நீக்க முடியாது. அதேநேரம், சில மாற்றங்களை மட்டும் செய்து உத்தரவிடுகிறேன்.

அதாவது, அப்துல் கலாம் விஷன் இந்திய என்ற கட்சி இதுவரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அதனால், அப்துல் கலாம் பெயரில் கட்சி நடத்த தடை விதிக்கப்படுகிறது. தேர்தலில் அவரது பெயர், புகைப்படத்தை சுயேச்சை வேட்பாளர் என்ற முறையில் பயன்படுத்திக்கொள்ள பொன்ராஜ் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தடையை நீக்க கோரிய மனு மீது ஜூன் 3ம் தேதி விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

படம்: உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ