Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 ஆண்டுகளில் 89 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அதில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில், அரசியல் கட்சிகளின் சார்பில் 89 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2011-ம் ஆண்டில் சராசரியாக 4.35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர்களின் சொத்து மதிப்பு சராசரி 8.63 கோடியாக அதிகரித்துவிட்டது. அதாவது, அவர்களின் சொத்தின் மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011 ஆம் ஆண்டில் 51 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது 2016 ஆம் ஆண்டில் 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011 ஆம் ஆண்டில் 44 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது நடப்பாண்டில் 62 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க.வின் 51 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும், தி.மு.க.வின் 16 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம், தே.மு.தி.க.வின் 11 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 27 லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 15 லட்சம் ரூபாயும், பா.ம.க.வின் 2 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.1 கோடியும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு சராசரியாக 3 கோடி ரூபாயும் உயர்ந்திருக்கிறது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close