Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 ஆண்டுகளில் மந்திரிகள் பால்குடம்,காவடி எடுத்ததுதான் மிச்சம்:விஜயகாந்த் ட்விட்டர் தாக்கு!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தனது ஃபாலோயர்ஸுடன்  இன்று(சனிக்கிழமை) உரையாடினார்.அப்போது ஒருவர் பதிவிட்ட கேள்வி ஒன்றுக்கு, 5 ஆண்டுகளில் மந்திரிகள் பால்குடம்,காவடி எடுத்ததுதான் மிச்சம் என்று விஜயகாந்த் பதில் ட்விட் செய்து லைக்குகளை அள்ளினார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.இதனால் தமிழகம் அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில்,சமூக வலைத்தளமான ட்விட்டரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். மதியம் ஒருமணிநேரம் தனது பக்கத்தை பின் தொடரும் ஆயிரக்கணக்கானோரிடம் அவர் உரையாடினார்.அதில் ஒவ்வொருவரும் கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை ரத்தினச் சுருக்கமாக அளித்து ஃபாலோயர்ஸ் மத்தியில் லைக்ஸ் குவித்தார்.


அதே நேரத்தில், அனைவரும் தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணியை ஆதரியுங்கள் என்றும் மறக்காமல் விஜயகாந்த் ட்விட்  செய்து  லைக்ஸ் அள்ளியுள்ளார். அவற்றில் சுவாரஸ்யமான பதிவுகள் படங்களாக கீழே...  

 

 

 


                     

எடிட்டர் சாய்ஸ்

MUST READ