Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களை பற்றிய சிறிதும் அக்கறை இல்லாதவர் ஜெயலலிதா! -இளங்கோவன் குற்றச்சாட்டு

சேலம்: தமிழக மக்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாதவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேர்தல் பிரசாரம் செய்தபோது, ''பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, உணவு இல்லாததால் பள்ளிக்கு வரமுடியவில்லை என்று மாணவர் ஒருவர் சொன்னதாலேயே மத்திய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.

அதேபோல் அனைத்து சாதியினரும் சரிசமமாக வாழ்வதற்கு சமத்துவபுரத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால், பொதுமக்களை நேரில் சந்திக்காமல், அவர்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாதவர் ஜெயலலிதா" என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close