Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத் தேர்தலையே தள்ளி வைக்கச் சொல்கிறார் இவர்!

கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததன் காரணமாக வாக்குப்பதிவை வருகின்ற 23–ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும் என்று அரவக்குறிச்சி பா.ம.க. வேட்பாளர் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யத் தொடங்கினர். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வெப் சைட் மூலம் புகார் மனு அனுப்பினேன்

தேர்தல் விதிமுறையை மீறி வேட்பாளர்கள் பணம் செலவு செய்துள்ளார். அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் புகார் மனுவில் கூறியிருந்தேன். எனது புகாரை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலை வருகின்ற 23–ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ரூ.1,000 முதல் 2 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 19–ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு 25–ம் தேதிக்கு அறிவிக்கப்பட உள்ளதால் அன்றைய தினமே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இடைத் தேர்தல் போல் ஆகிவிடும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close