Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க., அ.தி.மு.க.வின் அரசியல் இதுதான்! -விளக்கும் ஜி.ராமகிருஷ்ணன்


சென்னை: தி.மு.க., அ.தி.மு.க.வின் அரசியல், மூலதனத்தை சேர்ப்பது தான் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழக தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது முகநூலில், ''தி.மு.க., அ.தி.மு.க.வின் அரசியல், மூலதனத்தை சேர்ப்பது தான். ஆனால், கம்யூனிஸ்டுகளின் மூலதனமென்பது "நேர்மையே". அது மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கானது.'

ஒரு கட்சியின் பொறுப்பிலுள்ளவரோ, சாதாரண உறுப்பினரோ தவறு செய்யும் நிலை ஏற்படலாம். தவறு செய்பவரை பாதுகாப்பதற்கு பதிலாக நடவடிக்கை எடுப்பதே ஒரு நேர்மையான கட்சியின் நடைமுறை.

வேட்பாளர் நிலையிலேயே 3 பேர் பா.ம.க.வில் இருந்து விலகியிருக்கிறார்கள் என்பதன் பொருள் என்ன? நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டியது, பொது வாழ்க்கை மக்களுக்கு சேவை செய்வதற்காகவா அல்லது பொதுச் சொத்தை கொள்ளையடிப்பதற்காகவா?

மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய கொள்கையும், மக்களுக்கு சேவை செய்யும் மன உறுதியும் உள்ள கட்சிகள்தான், தலைமைதான் இன்றைய தமிழகத்தின் தேவை. இது தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. அணியிடம் உள்ளது" என்று பதிவிட்டு உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ