Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணப் பட்டுவாடா புகார் எதிரொலி..! தஞ்சாவூர் தொகுதிக்கு ஆணையம் வைத்த 'செக்'

 

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் மீதம் உள்ள 233 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூர் சட்டசபை தொகுதியின் தேர்தலும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்றிரவு தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பான புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பார்வையாளர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் அந்த தொகுதியின் தேர்தல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

எனவே தஞ்சாவூர் தொகுதியில் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 25ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், மக்கள் நல கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக ஜெயபிரகாசும் போட்டியிடுகின்றனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால், இன்று 232 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close