Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 மணி வரை 69.19 % வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பில்லை!

 

சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று நடைபெற்று வரும் தேர்தலில்  மாலை 5  மணி வரை சராசரியாக 69.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணி வரை சராசரியாக 42.1 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை  63.7 சதவீதமும் வாக்குகள் பதிவான நிலையில், மாலை 5 மணி வரை 69.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லக்கானி, " மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளன.

டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பாதிப்பு இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தினை நீட்டிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மழை நின்று இருப்பதால் 3 மணி நேர நிலவரத்தை பார்த்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.  வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு காத்திருப்போர் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

மின் தடை உள்ள பகுதியில் மாற்று அவசர விளக்குகள் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சிறிய மோதல்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை." என  தெரிவித்திருந்தார்.

வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பில்லை

இந்நிலையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என்றும், அதே சமயம் 6 மணிக்குள் வரிசையில் நின்றவர்களுக்கு எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் லக்கானி பின்னர் அறிவித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close