Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 முதல் 5 இடங்கள்தான் கிடைக்குமாம்: அமித்ஷாவுக்கு, தமிழக பாஜக தகவல்!

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1 முதல் 5 இடங்கள் கிடைக்கலாம் என பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவிடம், தமிழக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., மக்கள்நலக்கூட்டணி, த.மா.கா. என பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க. என பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தமிழக பா.ஜ.க.வுடன், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க எந்த பெரிய கட்சிகளும் முன்வரவில்லை. இதனால், இந்திய ஜனநாயக கட்சி, யாதவர் பேரவை ஆகிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தமிழக பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது.

இருப்பினும், கட்சியை பலப்படுத்தவும், கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேரிக்கவும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல், அகில இந்திய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன், பா.ஜ.க.வுக்கு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என தமிழக தலைவர்களிடம், அமித்ஷா கருத்து கேட்டுள்ளார்.

இதற்கு தமிழக தலைவர்கள் அளித்துள்ள பதிலில், ''1 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எப்படி இருக்கும்?என்று அமித்ஷா தமிழக தலைவர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

அதற்கு தமிழக தலைவர்கள் அளித்துள்ள பதிலில் ‘1 முதல் 5 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கோவை, கன்னியாகுமரி, நாகை, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறலாம்.

இருப்பினும், நிச்சயமாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுப்போம். அதேபோல், சில தொகுதிகளில் பெரிய கட்சிகளின் தோல்விக்கும் பா.ஜ.க. காரணமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக தலைவர்களின் பதிலை ஆய்வு செய்து வரும் அமித்ஷா, தேர்தல் முடிவு வெளிவந்ததும் தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை வகுப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ