Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழையால் எந்த பாதிப்பும் இல்லை - வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணையம் தகவல்!

சென்னை: நாளை (19-ம் தேதி) மழை பெய்தாலும் வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் இருக்காது என வாக்கு எண்ணிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த தகவலில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகளை எண்ணும் பணி நாளை (19-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறுகையில், ''வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதம் ஏந்திய போலீசார், ஆயுதம் இல்லாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அத்துடன் வீடியோ காண்காணிப்பு என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது'' என்றார்.

மழையால் பாதிப்பு இல்லை

கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் நாளையும் (19-ம் தேதி) மழை பெய்தால் வாக்கு எண்ணிக்கையில் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், ''மழையால் வாக்கு இயந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 'வாட்டர் புரூப்' பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது. இயந்திரங்களை பாதுகாக்கவும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை மழை பெய்தாலும், வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு என்ஜினீயர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close