Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக 70, அதிமுக 86 தொகுதிகளில் முன்னிலை!

 

திமுக 70 தொகுதிகளிலும், அதிமுக 86 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்து வருகிறார்.

திருக்கோவிலூரில் 4000 வாக்குகளும், கொளத்தூரில்  6 வாக்குகளும், சேப்பாக்கத்தில் 1843 வாக்குகளும் பெற்று திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

பல்லடம் 500 வாக்குகளும், உதகமண்டலம் 485 வாக்குகளும் பெற்று அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மேலும் 86 தொகுதிகளில் அதிமுகவும், 70 தொகுதிகளிலும் திமுகவும் முன்னிலை பெற்றுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ