Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. முன்னிலை!

சென்னை: திருவல்லிக்கேணி தொகுதியில் தபால் ஒட்டில் முதல் சுற்றில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 4 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில், திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் 1,500 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இதேபோல் ஒரத்தநாடு தொகுதியிலும் தி.மு.க. வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ