Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ., கருணாநிதி, ஸ்டாலின் முன்னிலை..! விஜயகாந்த், திருமாவளவன், அன்புமணி பின்னடைவு



முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 4வது சுற்றுகள் முடிவில் 11,059 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கருணாநிதி 21,825 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 10,766 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர் மைதீன்கான் 954 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்திதுள்ளார்.

திருக்கோவிலூர் தொகுதியில் 4004 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பொன்முடி முன்னிலை பெற்றுள்ளார்.

ஒரத்தநாட்டில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 315 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் 1843 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 2034 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி 1908 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 900 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
 


ஆர்கேநகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 1884 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் 15 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
 


அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 4066 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 2231 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2779 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேட்டூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலையில் உள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு முன்னிலையில் உள்ளார்.

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் 2178 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 243 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.தங்கமணி 3120 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

திருவாடாணை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் 8696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 1209 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.நட்ராஜ் 814 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு முன்னிலையில் உள்ளார்.

கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 1847 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

ஆலந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் 955 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி 105 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ