Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரும் 23ம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார்!

சென்னை: நடந்து முடிந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை அஇஅதிமுக பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

வரும் 23ம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். தமிழக ஆளுநர் ரோசையா அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அன்றே ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று(வெள்ளி)மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முதல்வராக ஜெயலலிதா முறைப்படி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவார். இதற்காக,புதியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக மதியம் இரண்டு மணியளவில் ஜெயலலிதா சென்னையில் உள்ள அண்ணா,பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.    

பதவி ஏற்பு விழா நடைபெறும் சென்னை  பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்,  பதவி ஏற்பு விழாவுக்கான  ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் 134 தொகுதிகளை அதிமுக வென்று புதிய சாதனை படைத்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றுள்ளது. அதிக இடங்களில் அதிமுக தனித்தே வென்றுள்ளதால் கடந்த 32 ஆண்டுகளாக இருந்துவந்த எம்.ஜி.ஆர். சாதனையை, ஆட்சியைத் தக்கவைத்ததன் மூலம் ஜெயலலிதா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

         

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ