Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெரும் வெற்றி: ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில்,அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்,'தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அஇஅதிமுக பொதுச்  செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.அதற்கு ஜெயலலிதாவும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ