Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு 232 தொகுதிகளில் கடந்த 16 தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. இதில், 134 தொகுதிகளை கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. கூட்டணியோ 98 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

ராதாபுரம் தி.மு.க. அப்பாவு 49
காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் 87
திண்டிவனம் அ.தி.மு.க. ராஜேந்திரன் 101
செய்யூர் (தனி) அ.தி.மு.க. முனுசாமி 304
கோவில்பட்டி தி.மு.க. சுப்பிரமணியன் 428
கரூர் காங்கிரஸ் சுப்பிரமணியன் 441
ஒட்டப்பிடாரம் தி.மு.க. கூட்டணி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 493
பெரம்பூர் தி.மு.க. கூட்டணி பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன் 519
திருவிடைமருதூர் (தனி) அ.தி.மு.க. சேட்டு 532
திருநெல்வேலி அ.தி.மு.க. நயினார் நாகேந்திரன் 601
திருமயம் அ.தி.மு.க. வைரமுத்து 766
பரமத்தி வேலூர் அ.தி.மு.க. ராஜேந்திரன் 818
திருப்போரூர் தி.மு.க. விஸ்வநாதன் 950
பர்கூர் தி.மு.க. கோவிந்தராஜன் 982

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ