Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கள் மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல!திருமா உருக்கம்

சென்னை: எங்கள் மாற்று அரசியல் விதை, ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2016 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும், இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு அணிகளும் பணத்தை வாரி இறைத்ததையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் ஊழல் கறை இல்லாதது. விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் கூட்டணி ஆட்சி உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் தொய்வின்றித் தொடரும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ