Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ரூபாய்கூட வாங்காமல் 23 லட்சம் பேர் பா.ம.க.வுக்கு வாக்களித்துள்ளனர் -அன்புமணியின் பெருமிதம்

சென்னை: ஒரு ரூபாய்கூட வாங்காமல் 23 லட்சம் பேர் பா.ம.க.வுக்கு வாக்களித்துள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர்.

பா.ம.க.வுக்கு மாநிலம் முழுவதும் 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேரும் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் முடிவில் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றாலும் பண பலத்தினாலேயே வெற்றி பெற்று உள்ளார்கள். நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது. பா.ம.க. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. தோல்விகளால் நாங்கள் துவண்டுபோய் விடவில்லை. முன்பைவிட வேகமாக பணியாற்றுவோம்.

வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பா.ம.க. தனித்தே போட்டியிடும். வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க.வினருக்கு எங்களது வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்