Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் எதிர்பார்த்த தோல்விதான் இது..! வைகோ தடாலடி

 

'தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்' என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் நலக்கூட்டணியின் தோல்வியை எதிர்பார்த்தேன். பிரசாரத்தின் கடைசி 3 நாட்களில் சில மாற்றங்கள் தென்பட்டன. பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் போன்றவை வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது. நான் கடந்த 1964ம் ஆண்டில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறேன். மக்கள் மனநிலையை என்னால் அறிய முடியும். அப்போதே எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து நான் எங்கள் தொண்டர்களிடம் கூறினேன். தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன். ஆனால் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவனும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

கோவில்பட்டி தொகுதி போட்டியில் இருந்து ஏன் விலகினீர்கள் என்று கேட்கிறீர்கள். இது சம்பந்தமாக நான் முடிவு எடுப்பதற்கு முன்பு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அங்கு ஜாதி கலவரங்களை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி இருந்தனர். என்னால் வாக்காளர்கள் பாதிக்கப்படக்கூடாது என கருதினேன். நான் அங்கு தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் நான் தோற்கடிக்கப்பட்டு இருப்பேன்.

தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வீழ்ச்சிக்கு பணம் தான் காரணம். தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லா இடங்களிலும் பணத்தை கொடுத்தார்கள். ஆனால் ஏழைகள் அந்த பணத்தை வாங்கி இருந்தால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் பணத்தை வாங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வெட்கப்படும் அளவுக்கு உள்ளது. இங்கு நதி பிரச்னை, மீத்தேன் திட்ட பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, ஊழல், தவறான அரசு என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவையெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு பணம் என்ற ஒன்று முன்னே வந்துள்ளது.

தி.மு.க.வை தோல்வி அடைய செய்வதற்காக என்னை கருவியாக பயன்படுத்தியதாக தி.மு.க.தான் இதை சொல்கிறது. நான் 29 வருடமாக அந்த கட்சியில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்தவன். இந்த நாட்டிலேயே கட்சி தலைவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். இந்த கருத்துக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இதுஒரு பொறுப்பற்ற குற்றச்சாட்டு" என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ