Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் ஸ்டாலின்!

சட்டமன்ற திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற திமுக குழுத் துணைத் தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார்.

மேலும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக பிச்சாண்டியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த ஆட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்தும் தோல்வி அடைந்தார்.

சென்னையில் நேற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள்: ஆ.முத்துக்குமார்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ