Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு! (படங்கள்)



மிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதலில் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்துடன் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.  பின்னர் ஜூன் 3ம் தேதி மீண்டும் சட்டசபை கூடி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்பின்னர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் முழு அளவிலான சட்டசபை கூட்டத் தொடருக்கான தேதி முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவைக்கு வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடமை உள்ளதால் சட்டப்பேரவைக்கு வந்தேன் என்றும், தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.




 

எடிட்டர் சாய்ஸ்