Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது? ராஜேஷ் லக்கானி பதில்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,
அந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து ஆறு மாதத்திற்குள் முடிவு செய்யப்படும்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை, வரும் ஜூன் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்யப்படும்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான செலவு ரூ.210 கோடி. விழிப்பு உணர்வு பிரசாரத்திற்கு ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 105 கோடியே 2 லட்ச ரூபாயில் 47 கோடியே 44 லட்ச ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ