Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாங்க ரெடி, நீங்க ரெடியா?- இளங்கோவனுக்கு சவால் விடும் தமிழிசை


உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழ்நாடு ‌காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக பாஜனதா தலைவர் தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், பாரதிய ஜனதாவை விட அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்திருக்கும். 4 தொகுதிகளில் அதிமுகவை பாரதிய ஜனதா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதை இளங்கோவன் உணர வேண்டும். எனவே, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாரா என சவால் விடுத்தார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ