Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவப்புக்கொடி தீமைகளை கண்டு அஞ்சாது..! கலகலத்த ராமகிருஷ்ணன்

'சிவப்புக்கொடி என்றுமே தீமைகளை கண்டு அஞ்சாது' என்று மதுரையில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் முழங்கினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சியினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் தொடர் தாக்குதலை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "கம்யூனிஸ்ட்களை தாக்குவதற்காக நாங்கள் என்றுமே பயந்து கிடந்தது கிடையாது. 2011 தேர்தலின் போதே 225 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எல்லோரையும் ஒடுக்க நினைக்கிறது. ஆனால் என்றுமே சிவப்புக்கொடி தீமைகளை கண்டு அஞ்சாது.
 

சி.பி.எம் கட்சியினருக்கு மேற்கு வங்கத்தில் மக்கள் ஆதரவு தெரிவித்து நிதி வழங்கியதை தெரிந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நிதி கொடுத்தவர்களை லிஸ்ட் எடுத்து அவர்களிடம் சென்று வன்முறையாக பணம் வசூலித்தனர். கம்யூனிஸ்டுக்கு நீங்கள் 500 கொடுத்து உள்ளீர்கள். அதனால் எங்களுக்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிடிங்கி கொடுமை செய்தனர். ஆனால் உயிருக்கு பயந்து கொண்டு நாளேடுகள் கூட செய்திகளை வெளியிடவில்லை.

பல இடங்களில் எங்களுக்கு எதிரானவர்கள் உண்டு. சேலத்தில் பல கம்யூனிஸ்ட் ரத்தங்கள் போலீஸ் தனது துப்பாக்கி முனையால் பலரது உயிரை எடுத்தது. அன்றுதான் தோழர் காவேரி உயிரும் பிரிந்தது. அவரது மகன் பக்கத்து அறையில் துப்பாக்கிச் சூடு குண்டுகளை எண்ணிய கொடூரமும் நடந்தது. பிறகு வெண்மணிகளின் நிகழ்வையும் மறக்க முடியாது. எங்களுக்கு பணம் வேண்டாம், விடுதலைதான் வேண்டும் என்று போராடிய தருணம் நெஞ்சை வதைக்கிறது. இது போன்று தொடர்ச்சியாகத்தான் தற்போது மம்தாபானர்ஜி அதிகாரம் செய்து கம்யூனிஸ்டுகளை வதைத்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று பேசினார்.

சே.சின்னதுரை

படங்கள்:
வீ.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ