Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் அப்படி கூறவில்லை..! சீமான் சொல்வது இதுதான்


தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள் களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.

தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன். அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும் தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்பது தவறு. தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றது தான் உண்மையான வெற்றியாகும். சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. வாக்குச் சாவடி முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் கூட உள்ளது.

ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதலமைச்சராக இருந்தபோது இதை நிறைவேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டுமல்ல, மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறைவேற்ற போவதில்லை.

தமிழகத்தில் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்குகளில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பரப்பப்பட்டு அவர்களது செல்வாக்கை சரிக்கும் செய்திகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தெரியாது. அதுகுறித்து கவலைப்படுபவர்களுக்கு தான் பிரச்னை. நான் கவலைப்படுவது இல்லை" என கூறியுள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ