Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த மொழியில்தான் படிக்க வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது! -தமிழிசை

சென்னை: தமிழகத்தில் யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என சொல்ல கருணாநிதிக்கோ அல்லது வேறு எந்த தலைவருக்கோ உரிமை கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மாணவர்களிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளாறர். மத்திய பாடத்திட்டத்தில் எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பினால் எடுத்து கொள்ளலாம். திணிக்கப்படாது என மத்திய அரசு கூறி உள்ளது.

நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவைப்படுவதால் அதை கற்கிறோம். ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைப்படுகிறது. அதை கற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதியோ மற்ற தலைவர்களோ யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கிடையாது.

பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பா.ஜ.க. செயல்பாட்டிற்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 10 லட்சம் ஜி.பி.எஸ். கருவிகளை வழங்க உள்ளது. கடலில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது கட்சி ரீதியான சந்திப்பு கிடையாது. மக்களுக்கு நலன் தரக்கூடிய வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற பிரதமரை மாநிலத்தின் முதல்வராக சந்தித்து உள்ளார். இது ஆரோக்கியமான சந்திப்பு.

இந்த சந்திப்பை அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி என கூறுவது சரியானதல்ல. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், பா.ஜ.க. தலைவரை சந்திக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டால் அதை எதிர்த்து பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close