Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்கள்: இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தின் மாபெரும் பாய்ச்சல்!'

சென்னை: ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் ஏவியதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் அறிவியல் பாய்ச்சல் நிகழ்த்தி, வளர்ந்த நாடுகளைவிட விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறியுள்ளதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர்.பாரிவேந்தர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இன்று (22.06.2016) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாட்டிற்காக 20 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் வானிலை, தொலைத்தொடர்பு மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ந்து வந்த காலத்தில் பொருளாதார பலவீனத்தின் காரணமாக, தான் தயாரித்த ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவி, நிலைநிறுத்த தொழில்நுட்பத்தில் வளர்ந்த பிற மேலைநாடுகளிடம் காத்துக்கிடந்த அவல நிலை மாறி, தற்போது வளர்ந்த நாடுகள் தயாரித்த செயற்கைகோள்களை தனது ராக்கெட்டின் மூலம் ஏவுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கின்றது.

நவீன மோட்டார் பொருத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி.34 ராக்கெட்டின் மூலம் இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2, மற்றும் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது மொத்தம் 1288 கிலோ எடைகொண்ட 20 செயற்கை கோளையும் ஒரே நேரத்தில் ஏவி அதனை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திருப்பது இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளைவிட முன்னேறியுள்ளதை நமக்கு உணர்த்துகின்றது.

குறிப்பாக இஸ்ரோ தயாரித்த கார்ட்டோசாட்-2 செயற்கை கோளானது பலவிதங்களில் வித்தியசமானது. இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன இரண்டு கேமராக்களின் மூலம் பூமியில் உள்ள எந்த ஒரு பொருளையும் முப்பரிமாணத்தில் (3D) 30 கி.மீ பரப்பளவில் படங்களாக எடுத்து பூமிக்கு அனுப்பும். தரைக்கட்டுப்பாட்டுடன் தொடர்புகொள்ள முடியாத நேரத்தில் தனக்குதானே அப்படங்களை சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது என்பது மேலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாகும்.

இந்த வரலாற்று சாதனைக்காக, இரவு பகலாக உழைத்த இஸ்ரோ தலைவர் – விஞ்ஞானிகள் – பொறியாளர்கள் – தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, வருங்காலத்தில் இந்தியா உலகிற்கே தலைமை ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்." என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close