Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா!

 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக  குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை என்றபோதிலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணாவிடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பது உண்மைதான் என்று உறுதிபடுத்தினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ