Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி..மு.க.வில் இணைகிறது மக்கள் தே.மு.தி.க.! -ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மக்கள் தே.மு.தி.க., விரைவில் தி.மு.க.வில் இணைய உள்ளது. இதற்கான தீர்மானம் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியில் இருந்து வி.சி.சந்திரகுமார் தலைமையில் சிலர் பிரிந்து மக்கள் தே.மு.தி.க. என்ற புது கட்சியைத் தொடங்கினர். இதை தொடர்ந்து இவர்கள், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஈரோடு, மேட்டூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், மக்கள் தே.மு.தி.க.வின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தலைமையில் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வில் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது..

இதை தொடர்ந்து, மக்கள் தே.மு.தி.க. விரைவில் தி.மு.க.வுடன் இணையும் என்றும், தே.மு.தி.க.வில் இருந்து மேலும் பலரை தி.மு.க.வுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சி எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ