Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரை பூரிப்பில் ஆழ்த்திய 12 ஆயிரம் பேர்..! திணறிப் போன தலைமைக் கழகம்

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சகோதரர் உள்பட 11,967 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், திமுக முன்னாள் எம்எல்ஏ பாபு, நடிகர் ராஜ்குமார் உள்பட திமுக, தமாகா, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 967 பேர் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலை அதிமுகவில் இணைந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, "அதிமுக உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஓர் அரசியல் இயக்கமாகும். நீங்கள் வந்துள்ள இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இந்த கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவின் லட்சியம், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், வளமான தமிழகத்தை படைத்து, எல்லோரும் பயன்பெற வேண்டும், சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே ஆகும். இதனை நன்கு உணர்ந்துதான், நீங்கள் அனைவரும் இன்று என்னுடைய தலைமையில் கழகப் பணியாற்ற வந்திருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு, நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்த இணைப்பு விழாவையொட்டி ராயப்பேட்டை தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ