Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் நடப்பது ஏன்'?

சென்னை: அண்மைக்காலமாக சென்னையில் மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் கொலைகள் நடப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுமக்கள் மனநிலையை பற்றியும் விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது, அங்கு இருந்த மக்கள் தலையிட்டு அப்பெண்ணை பாதுகாக்க முன்வரவில்லை என்றும் கொலைகாரனை விரட்டிப் பிடிக்க முயலவில்லை என்றும் விமர்சனங்கள் பரவலாகப் பேசப் படுகின்றன.

 
இதற்கு முன், திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை கடை வீதியில் சங்கர் – கவுசல்யா கலப்புமண இளம் தம்பதியினர் கொடியவர்களால் தாக்கப்பட்டு, சங்கர் அதே இடத்தில் இறந்தார். கவுசல்யா படுகாயமுற்று துடித்துக் கொண்டிருந்தார். அப்போதும்கூட, மக்கள் நிறைந்த அக்கடை வீதியில்  கொலைகாரர்கள் தாக்கும் போது, குறுக்கே புகுந்து தடுக்க மக்கள் முன் வரவில்லை என்ற செய்தி வெளியானது.

மேற்கண்ட இரு கொலை நிகழ்வுகளும் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் அதே தொடர்வண்டி நடை மேடையிலும், கடை வீதியிலும் நடந்திருந்தால் பொது மக்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. உறுதியாக, கொலையைத் தடுக்க முடியாவிட்டாலும் கொலைகாரர்களை விரட்டிப் பிடிக்கவாவது முயன்றிருப்பார்கள்.

இப்போது ஏன் மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் செய்ய முடிகின்றது?

எல்லை கடந்த பன்னாட்டு நிறுவன வேட்டைப் பொருளியல் (உலகமயப் பொருளியல்) செயலுக்கு வந்தபின், மக்கள் உதிரி நுகர்வோராகவும், ஒருவருக்கொருவர் போட்டியாளராகவும் மாற்றப்பட்டு விட்டார்கள். இந்த நுகர்வு வாதம் மக்கள் மனத்தில் மேலோங்கிய பின், ஒவ்வொருவரும் சமூகக் கூட்டுப் பண்பை – பொறுப்புணர்வை மெல்ல மெல்ல இழந்து, மனத்தளவில் தனித்தனித் தீவுகளாகிவிட்டனர்.

இன்றைய சமூகப் பொதுமனத்தில் வளர்க்கப்படும் தன்னல நுகர்வுவாதம், ஒரு தனி  நபரின் துணிச்சல் பண்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கோழைகளாக்கி விடுகிறது.
 
தமிழ்நாட்டிலுள்ள ஆட்சியின் திறமைக்குறைவு, பொது அமைதியில் அதற்குள்ள அக்கறை குறைவு, காவல்துறையில் நிலவும் ஊழல் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப் பிழைக்கும் உளவியல், நீதித்துறையில் நிலவும் ஊழல்கள், சமூகப் பொறுப்பின்மை போன்றவற்றை இவ்வாறான நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணங்களாகச் சொல்வது, சரிதான்!

அதே வேளை, தனி மனிதர்களின் கூட்டுப் பண்பு, அநீதியைத் தடுக்க வேண்டுமென்ற நேர்மையுணர்ச்சி, துணிச்சல் ஆகியவை மேற்கத்தியத் திணிப்பான உலகமயப் பொருளியல் பண்பாட்டால் சிதைந்து விட்டன என்பதையும் தவறாமல் கணக்கில் கொள்ள வேண்டும். இதைச் சரி செய்வதற்கு அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வித்துறை, ஊடகத்துறை போன்றவை மக்களிடையே சமூகக் கூட்டுணர்ச்சி, பிறர் மீது அக்கறை, நேர்மையின் பால் எழும் துணிச்சல் போன்ற பண்புகளை வளர்க்க முயல வேண்டும்.
 
தனக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழ வேண்டும் என்ற சங்க காலத் தமிழரின் அறப் பண்புகளை தமிழ் மக்களிடம் விதைப்பதும், தமிழ்ச் சமூகத்திற்கேற்ற பொருளியல் கொள்கையை வடிவமைப்பதும் மிகமிகத் தேவை! " என்று கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ