Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சித் தேர்தலில் இலட்சிய தி.மு.க. தனித்துப் போட்டி! -டி.ராஜேந்தர் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இலட்சிய தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வட சென்னை பகுதியில் கூலிப்படைகள் ஏவி விடப்படுகின்றனர்.  அதனால், பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது" என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இலட்சிய தி.மு.க. தனித்துக் களம் இறங்கப்போகிறது. மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்டத்திருத்தம் குறித்து முதலமைச்சர் ஜெயலிதா விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close