Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனகநாச்சியம்மன் கோயிலை மீட்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!



பாலாற்றின் கரையில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலை ஆந்திர அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக, ஆந்திர எல்லையில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சனை நிலுவையில் உள்ளது. இந்த இடத்தில் உள்ள கனகநாச்சியம்மன் கோயில், கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழக இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலை ஆந்திர அறநிலையத் துறையானது, அண்மையில் கைப்பற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குச் செல்வர். இந்த நிலையில், இரு மாநில எல்லை பிரச்னையாக மாறாத வகையில், சுமூகமாகப் பேசி தீர்த்தோ அல்லது நீதிமன்றம் மூலமோ ஒரு நல்ல முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஏற்கெனவே தமிழகத்துக்கு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களால் தண்ணீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், இந்தக் கோயில் பிரச்னையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறாமல் ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிந்து, இரு மாநில உறவுகளைக் கட்டிக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று  கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close