Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷ ஊசி போட்டு மருத்துவர் சரவணன் கொலையா? சிபிஐ விசாரிக்க விஜயகாந்த் கோரிக்கை!

சென்னை: தமிழக மருத்துவர் சரவணன் விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவி வருவதால்,  அதில் மறைந்துள்ள மர்மத்தை சிபிஐ விசாரித்து, உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் சரவணன் மர்மமான முறையில் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா என்பதே மர்மமாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் நிலை என்ன என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும் வகையில், இறந்த மாணவர் சரவணன் உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து சரியான தீர்ப்பை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ