Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார் பிரேமலதா!

கோவை: மிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம், திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், "திருப்பூர் அருகே கன்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது" என பேசியதாக சொல்லி, அவர் மீது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புகார் கொடுத்தார். இது தொடர்பாக திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பிரேமலதாவுக்கு,  முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று காலை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரேமலதா, நீதிபதி முன் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, " இந்த வழக்கு முன்னாள் அமைச்சர் ஆனந்தனால் தொடரப்பட்ட பொய் வழக்கு" என்றார்.

மேலும், " தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு செய்து கொண்டது தொகுதி உடன்பாடு மட்டும்தான். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, முரசு சின்னத்தில் போட்டியிடும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார். தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு வலி நிறைந்த, பற்றாக்குறை பட்ஜெட்"  என்று  பிரேமலதா கூறினார்.

பிரேமலதா வந்தததால் நீதிமன்ற வளாகத்தில்  ஏராளமான தேமுதிகவினர் குவிந்தனர். இதனால்  சிறிதுநேரம்,  அந்தப் பகுதியில்  பரபரப்பு நிலவியது.   

- ச.ஜெ.ரவி
 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ