Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தல் நெருக்கத்தில் கிராம பஞ்சாயத்துகள் மீது கவனம் திருப்பும் அரசு!

 

மிழகத்தில் சிறப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, வீடு தோறும் கழிப்பறைகள் கட்டுவது, தினமும் குப்பைகளை அள்ளி கிராமங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும், 'சிறந்த தூய்மையான பஞ்சாயத்து' (கிளீன் வில்லேஜ் அவார்டு) என்ற  மாநில விருதும், சிறப்பு நிதியாக ரூ. 5 லட்சமும் உள்ளாட்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பஞ்சாயத்து வீதம், 31 மாவட்டங்களில் 31 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்படும். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று,  முதலமைச்சர் மூலம் சிறந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு விருது வழங்கப்படும்.

இதற்காக உள்ளாட்சித்துறை,  ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

கிடப்பில் போனது:

சிறந்த தூய்மையான பஞ்சாயத்துக்கான விருது வழங்கும் திட்டம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2013 - 14ம் ஆண்டு முதல் அந்த விருது திட்டம்,  அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி:

தற்போது உள்ளாட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 2ம் தேதியோடு முடிகிறது. இதையொட்டி, உள்ளாட்சி அமைப்பு பதவிகள் விரைவில்  கலைக்கப்படவுள்ளன. இதற்கு பிறகு, அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விருது வழங்கும் திட்டத்தை,   மீண்டும் செயல்படுத்த உள்ளது. இதற்காக 2014 -15ம் ஆண்டுக்கான விருதுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பஞ்சாயத்து வீதம் 31 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய காட்டுப்பாக்கம், திருவள்ளூரில் சின்ன கடம்பூர், கோவையில் கருடபாளையம், மதுரையில் அச்சம்பட்டி, விருதுநகரில் ஆத்திப்பட்டி, திண்டுக்கல்லில் ஆலமரத்துப்பட்டி, நெல்லையில் ஆனைக்குடி என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பஞ்சாயத்து வீதம் 31 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு,  சிறப்பு நிதியாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ரூ.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்துறை மும்முரம்:

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறந்த தூய்மையான பஞ்சாயத்துக்கான விருதை முதல்வர் ஜெயலலிதா மூலம் வழங்க உள்ளாட்சித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளில் உள்ளாட்சித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ