Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹைடெக் வசதிகளுடன் அமைகிறது டெல்லி பா.ஜ.க தலைமையகம்!

புதுடெல்லி: டெல்லியில் அசோகா சாலையில் இயங்கிவந்த பாஜக தலைமை அலுவலகம், தீன்தயாள் உபத்யாயா சாலைக்கு மாற்றப்பட உள்ளது. ஹைடெக் வசதிகளுடன், நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைமை அலுவலகங்களையும் இணைக்கும் வகையில் புதிய அலுவலகம் வடிவமைக்கப்படுவதாக பாஜக வட்டாரம் தெரிவிக்கிறது.

பாஜக-வின் தலைமை அலுவலகம் டெல்லியின் மரங்கள் அடர்ந்த அசோகா சாலையில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இங்குதான் அக்கட்சியின் தூண்களாக விளங்கிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றியுள்ளனர். கட்சித் தொண்டர்களை இங்குதான் சந்திப்பது வழக்கம்.

இந்த நிலையில் இந்த அலுவலகம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் தீன்தயாள் உபத்யாயா பெயரில் உள்ள சாலையில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டு, அங்கு மாற உள்ளது. புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமீத் ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். புதிய கட்டடம் மூன்று மாடி அலுவலகமாக மாற உள்ளது.

புதிய அலுவலகத்தில் அனைத்து நவீன வசதிகளும், ஹைடெக் தொழில்நுட்பத்துடனும், நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைமை அலுவலகங்களையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- பா.ஜெயவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ