Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பொதுவாழ்க்கையில் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்!'' ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தி.மு.க., தே.மு.தி.க, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் என பல்வேறு தரப்பினர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு தொடர்ந்து உள்ளது. அதில் 55 வழக்குகள் ஊடகங்களுக்கு எதிராகவும், தி.மு.க தலைவர்கள் மீது 85 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. விஜயகாந்துக்கு எதிராக 28 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தே.மு.தி.க., தரப்பில் விஜயகாந்த், பி.ஜே.பி., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், பிரபுல் சி. பந்த் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், "வெறுமனே முதல்வரின் உடல் நிலை குறித்து எழுதப்பட்ட செய்தியின் மீது அவதூறு வழக்குப் போட முடியாது. நீங்கள்(ஜெயலலிதா) பொதுவாழ்க்கையில் இருக்கும் நபர். நீங்கள் விமர்சனங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும். தமிழ்நாடு அரசைப் போல வேறு எந்த அரசும் மாநில அரசு இயந்திரத்தை, இது போல தேவையில்லாத விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதில்லை" என்று கண்டனம் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது தமிழக அரசு. கடந்த மாதம் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் பாலிமான் ஆகியோர் கூறுகையில், "இவையெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தக் கூடாது" என்று கூறி இருந்தனர்.

- கே. பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்