Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிராகரித்த ஜெட் ஏர்வேஸ்! கடவுளுக்கு நன்றி செலுத்தும் ஸ்மிர்தி இரானி 

'என்னுடைய தோற்றம் சரியில்லை என விமான பணிப்பெண் வேலையைத் தர மறுத்தார்கள். அந்த நிராகரிப்புக்காகக் கடவுளிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என பேசியுள்ளார் மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

அவர், சமீபத்தில் Air Passengers Association of India (APAI) நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட அவர் மேலும் பேசுகையில்,

'நான் நல்ல பர்சனாலிட்டியாக இல்லை என்கிற காரணத்தால் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்தார்கள். அப்போது நான் வருத்தப்பட்டேன். அதுவும் நல்லதுக்காகத் தான். அதற்குப் பிறகுதான் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்துதான் அரசியல்வாதி ஆவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இப்பொழுது அந்த நிராகரிப்புக்காக நன்றி சொல்கிறேன். இது மட்டுமல்லாமல் மெக்டொனால்டிலும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அது என்னுடைய வரலாறில் வராத ஒன்றாகிவிட்டது. 

நிறைய பேருக்கு, முதல் வேலை மறக்க முடியாததாக அனுபவமாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் முதல் வேலை நல்ல வேலையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னை நிராகரித்த கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்' என பேசியிருக்கிறார் மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும்  ஸ்மிருதி இரானி.

-வே. கிருஷ்ணவேணி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ