Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் தலித் அல்லாதோர் பங்கேற்கும் கருத்தரங்கு... அடுத்த சர்ச்சைக்கு ஆயத்தமாகிறாரா ராமதாஸ்?

டந்த 2013ம் ஆண்டு அனைத்து சமுதாய கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்திய ராமதாஸ், மீண்டும் தலித் அல்லாதோர் அமைப்புகளோடு சேர்ந்து அடுத்த ஆட்டத்தை துவக்கி விட்டார். தலித் அல்லாத அனைத்து சமூக அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும். தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் சேலத்தில் கருத்தரங்களை நடத்தியுள்ளார் ராமதாஸ். 
பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். தலித் அல்லாத பிற சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினர்.

'செல்போன் தான் பெரிய கிரிமினல்'

கருத்தரங்கில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். ‘‘பெண்களுக்கு 3 சக்திகள் இருக்கிறது. ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி. ஆண்களுக்கு சக்தியை கொடுப்பவளே பெண்கள் தான். ஆனால் நம்ம வீட்டு பெண்கள் ஸ்கூலுக்கும், கல்லூரிக்கும் நிம்மதியாக போயிட்டு வர முடிகிறதா? சில துஷ்ட மிருகங்கள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை பெண்கள் வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம் நம் அப்பா, அம்மா, பாட்டி யாரும் படிக்கவில்லை நாம் நன்றாக படிக்க வேண்டும். இதை வீட்டில் சொன்னால் நம்மை கல்லூரிக்கு விடாமல் நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் சொல்வதில்லை. பிறகு இந்த நாய்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  

காதல் என்பது வயது வந்த பிறகு விரும்பியவனை அம்மாவிடம் சொல்லி திருமணம் செய்து கொள்வது தான் காதல். ஸ்வாதி என்ற ஐயங்கார் பெண் காதலிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு கொடியவன் வாயிலேயே வெட்டி இருக்கிறான். அதே போல நவீனா என்ற பெண் தன்னை காதலிக்க வில்லை என்ற காரணத்திற்காக ஒரு மிருகம் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறான். 
பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்த வேண்டும். இங்கு வந்திருக்கும் பெண்கள் நம்ம வீட்டு பெண்ணை காதல் என்று கடத்திட்டு போகிறார்களே?. இந்த அநியாயத்திற்கு ஒரு முடிவு கட்ட ஒரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும். 10வது படிக்கும் பெண் காதலிப்பதாக திரைப்படங்களில் காட்டுகிறான். சின்ன திரை பெரிய திரையை விட பெரிய கிரிமினல் இந்த செல்போன்" என்றார்.

ஒரே சாதியில் கூட காதலிக்க கூடாது

கருத்தரங்கில் பேசிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, "பணக்கார பெண்களை ஒரு கும்பல் காதல் என்ற போர்வையில் கடத்திக் கொண்டு போகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வருடமாக மருத்துவர் அய்யா சொல்லி வந்தார். அதையே தான் தற்போது ஐ.நா., சபையும், பக்கத்து மாநிலம் பெங்களூரு உயர் நீதிமன்றமும் கூறி இருக்கிறது’’ என்றார்.

கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார், "நான் ஓப்பனா சொன்னால் காதலுக்கு எதிரானவன். என் பார்வையில் காதல் என்பது விருப்பம். அதை வீட்டில் சொல்லி கல்யாணம் கட்டி தொலைய வேண்டியது தானே. பெற்றோர்கள் சரியான பொருத்தம் என்றால் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரே சாதியில் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ராமதாசுக்கு பிடிக்காது. ஏனென்றால் ராமதாஸ் அவரது மாமன் மகளை காதலித்து தான் திருமணம் பண்ணியிருக்கிறார். என் பெண் காதலித்து இன்னொருவனோடு ஓடி விட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் இறந்து விடுவேன். என் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். கொளத்தூர் மணிக்கு 2 பெண் பிள்ளைகள் ஒரு பெண்ணை வன்னியருக்கும், இன்னொரு பெண்ணை நாடாருக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இது என்ன சாதி மறுப்பு திருமணம் ஏன் தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு பெண்ணை கொடுக்க வேண்டியது தானே?. நான் கம்யூனிஸ்ட் தோழர்களிடமும் பழகி இருக்கிறேன். தங்கள் மகளுக்கு பெண் பார்க்கும் போது அவர்கள் தலித் தோழர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள். அது மேடை பேச்சோடு சரி’’ என்றார்.

காதல் உருவாக இவர்கள் தான் காரணம்

வழக்கறிஞர் பாலு, "காதல் உருவாவதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. ஒன்று சில அரசியல் தலைவர்கள் தூண்டி விடுவது இரண்டாவது ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலம் வயப்படுவது. நாங்கள் அம்பேத்கரின் எழுத்துகள் அனைத்தையும் படித்திருக்கிறோம். அம்பேத்கர் எந்த இடத்திலும் சாதி இருக்க கூடாது என்று சொல்லவில்லை," என்றார்.  

பெரும்பாலும் கல்லூரியில் தான் காதல் வருகிறது. எனவே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்த பின்னர் தான் காதலிக்க அனுமதி கொடுக்க வேண்டும்; தமிழக அரசு இரு பாலர் கல்வி முறையை ஒழித்து விட்டு பெண் பாலினத்திற்கு தனி கல்வி நிலையங்களும், ஆண் பாலினத்திற்கு தனி கல்வி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும்;  ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பி.சி.ஆர்., சட்டம் என்று இருக்கிறதாம். நாம் அனைவரும் சேர்ந்து பி.சி.ஆர்., சட்டத்தை விட பெரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். அப்போது தான் நம் இனத்தை காக்க முடியும்" என கருத்தரங்கில் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் பேச்சில் பரபரப்பை கிளப்பினர்.

பெண் குழந்தைகளுக்கு செல்போன் கூடாது

கூட்டத்தின் முடிவில் காதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 1 கோடி வழங்க வேண்டும், பத்திரிக்கைகள் ஒரு தலை காதல் என்று எழுத கூடாது. பெண்கள் மீதான வன்முறை என்று தான் எழுத வேண்டும், பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை உடனே தண்டிக்க நடவடிக்கை வேண்டும். பெண்களுக்கு தனி பள்ளி, தனி போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடம் அமைத்து தர வேண்டும். பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.  பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிப்பதோடு செக் பண்ண வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

-வீ.கே.ரமேஷ்
படங்கள் : தனசேகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close