Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் நாராயணசாமி இடைத்தேர்தலில் எங்கு போட்டியிடுகிறார் தெரியுமா?

புதுச்சேரி: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியை கைப்பற்றிய புதுவை முதல்வர் நாராயணசாமி,
இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டார்.

கடந்த மே மாதம் தமிழகம் - புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் திமுக இரண்டு இடங்களையும் பிடித்ததால் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களை மட்டுமே பிடித்தது.

முதல் அமைச்சர் பதவிக்காக மூத்த தலைவர் முண்டியடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீர் திருப்பமாக தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதல் அமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. அதற்கு அப்போது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து முதல் அமைச்சராக பதவி ஏற்றார் நாராயணசாமி.

இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இதற்கு யாராவது ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகி, நாராயணசாமிக்கு விட்டுத்தர வேண்டும். பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. இதனால் காங்கிரஸ் பலமிக்க தொகுதியில் நிற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இல்லாவிட்டால் வெற்றி சந்தேகமாகிவிடும்.

அந்த வகையில் கடந்த தேர்தலில் 12,141 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நெல்லித்தோப்பு தொகுதியை குறி வைத்திருக்கிறார். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ஜான்குமார் நாராயணசாமியால் கட்சிக்கு கொண்டு வரப்பட்டவர் என்பதால் அந்தத் தொகுதியை தேர்வு செய்திருக்கிறார் நாராயணசாமி.

மேலும் வருடம் முழுவதும் இலவசங்களை வழங்கி தொகுதியை ஜான்குமார் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்பதால் இங்கு நின்றால் எளிதில் வெற்றி பெறலாம் என்பதும் நாராயணசாமி போட்டு வைத்திருக்கும் கணக்கு. அதற்காக தேசிய அளவிலான உறுப்பினர் பதவி, வாரியத்தலைவர், நியமன எம்.எல்.ஏ உள்ளிட்ட பதவிகள் என்று ஜான்குமார் விதித்த நிபந்தனைக்க்கு எல்லாம் தலையசைத்து விட்டாராம் நாராயணசாமி.

இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார் நாராயணசாமி. உடன் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏவும் முதல்வரின் பாராளுமன்ற செயலருமான ஜான்குமாரும் கிளம்பி சென்றார். அப்போது தான் ராஜினாமா செய்வதற்கான ஒப்புதலை காங்கிரஸ் மேலிடத்தில் ஜான்குமார் தெரிவித்துவிட்டதாகக் கூறுகின்றன டெல்லி வட்டாரம்.

பட்ஜெட் கூட்டுத்தொடர் நாளை (9ம் தேதி) முடிவடைகிறது. அதனால் நாளை இரவே தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஜான்குமார் அளிப்பார் எனத் தெரிகிறது. அதன்பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு நாளை இரவே வெளியாகலாம். இடைத்தேர்தலில் நெல்லித்தோப்புத் தொகுதியில் களம் இறங்கத் தயாராகிவிட்டார் முதல் அமைச்சர் நாராயணசாமி.

- ஜெ.முருகன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ