Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலாக்கப்பிரிவு விசாரணை வளையத்தில் நத்தம்?

வெளி மாநிலங்களில் இருந்து மின் கொள்முதல், இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கியது...இந்த இரண்டு விவகாரங்களையும் கடந்த அ.தி.மு.கழக ஆட்சியின் போது  கண்கொத்தி பாம்பாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவுவும், ரெவின்யூ இன்டலிஜென்ஸ் பிரிவும் கவனித்து வந்தன. அந்தவகையில், இந்தோனேஷியா, போர்ச்சுக்கல்...ஆகிய நாடுகளில் உள்ள பிஸினஸ் புரோக்கர்கள் சிலரின் கோஷ்டி மோதலில், ஒருவரை ஒருவர் மாட்டிவிடும் காரியத்தில் இறங்கினார்களாம். அந்த வகையில், தமிழக மின்சாரத்துறையின் ஜாம்பவான்கள் எந்த அளவுக்கு கமிஷன் பேசினார்கள்? அவற்றை எந்தெந்த நாடுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்கள் புரோக்கர்களின் ஒரு கோஷ்டி மூலம் அமலாக்கப்பிரிவுக்கு கிடைத்தது.

லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலை விலைக்கு வாங்கியதன் பின்னணியில் புரோக்கராக செயல்பட்டவரின் ஜாதகமே தற்போது அமலாக்கப்பிரிவிடம் உள்ளது. சர்வதேச நாடுகளில் கறுப்பு பணத்தை  ஃப்ரீயாக முதலீடு செய்வதற்கு ஏதுவாக  போர்ச்சுக்கல் நாட்டில் குடியுரிமையை வாங்கியிருக்கிறார் தமிழக பிஸினஸ் புள்ளி ஒருவர். மதுபான தயாரிப்புகளுடன் தொடர்பில் உள்ள அவர் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துடன்  நட்பு வட்டாரத்தில் இருந்ததாரா? என்கிற கோணத்திலும் அமலக்காப்பிரிவு அதிகாரிகள் விசாரித்துவருவதாக தகவல். வெளிநாடு மற்றும் இந்திய அளவில் தமிழக மின்துறையில் நடந்த ஊழல்கள் பற்றிய தேவையான ஆதாரங்களை சேகரித்த பிறகே, ரெய்டு படலத்தை வருமான வரித்துறையினருக்கு தகவல் சொல்லி அரங்கேற்றியிருக்கிறாரகள். இதன் பின்னணியில் இருப்பது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்.  இதன் அடுத்த கட்டமாக, நத்தம் விஸ்வநாதனுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ