Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அண்ணே... நான் ஏன் அம்மா கட்சில சேர்ந்தேன் தெரியுமா..?' - லகலக கஞ்சா கருப்பு #QuickRead

 

'கஞ்சா கருப்பு அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார்' என்கிற செய்தி கேட்டு அவருக்கு போன் அடித்தால், ‘அம்மா... அம்மா... நீ எங்க அம்மா... உன்னவிட்டா எனக்கு யாரு அம்மா?’  பாட்டு ஒலிக்கிறது. போனை எடுத்து, ''சொல்லுங்க... கருப்பு பேசறேன்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''என்ன திடீரென்று அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டீர்கள்?''

‘'திடீரென்று எல்லாம் இல்லை. ஏற்கெனவே நான் அ.தி.மு.க-வின் தீவிர அனுதாபி. அ.தி.மு.க என்பதைவிட அம்மாவின் தீவிர ஆதரவாளன். நான் பிறந்தபோது முதலில் பார்த்தது எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதா அம்மாவையும்தான். காரணம், என் அம்மா சினிமா கொட்டகையில், 'குடியிருந்த கோவில்' படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ‘உன் விழியும்.. என் வாளும் சந்தித்தால்..’ பாடலின்போது பிறந்தேனாம். அப்போது இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர்-தான் தெய்வம். அரசியல் ஆர்வம் திடீரென்று பிறக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தபோது எல்லாம் அதை வெளிக்காட்டியே வந்து இருக்கிறேன். இப்போது அரசியலில் அதிகார்பூர்வமாக இணையவேண்டும் என்று தோன்றியதால் இணைந்துவிட்டேன்.'’

''ஜெயலலிதா உங்களிடம் ஏதாவது சொன்னாரா?''

'‘விழாவில் என்னைச் சந்தித்தபோது, 'மிக்க மகிழ்ச்சி' என்று சொன்னார். ஆனால், இதற்கு முன்பாக ஒருமுறை விமான நிலையத்தில் சந்தித்து இருக்கிறேன். 'படம் எல்லாம் எப்படிப் போகிறது' என்று நலம் விசாரித்தார். கையில் பச்சைக்குத்தி இருந்ததைப் பார்த்து, 'இது எப்போ குத்தியது' என்று கேட்டார். ஏழு வயதில் என்று சொன்னபோது ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தார். இனி, நான் அ.தி.மு.க தொண்டன். அம்மாவுக்கு ஆதரவாக இருக்கப்போகிறேன். அவரது திட்டங்களை, கொள்கைகளை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன்.’'

''திரைப்பட நடிகர் கருணாஸ் அரசியலுக்கு வந்து சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். அவரைப் பார்த்து அந்த ஆசையில் நீங்கள் வந்தீர்களா?''

‘'கருணாஸை சினிமாரீதியாக மட்டும்தான் தெரியும். ஏற்கெனவே சொன்னதுபோல தீவிர அம்மா ஆதரவாளன். வி.பி.கலைராஜன் அண்ணன் எனக்கு நெருங்கிய உறவினர். அவர்தான், 'எத்தனை நாள்தான் வெளியே இருப்பாய். கட்சிக்கு வா' என்று அழைத்தார். அரசியலில் அம்மா அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டி இணைந்தேன். அவ்வுளவுதான். அதோடு யாருக்கு என்ன பதவி தரவேண்டும் என்பது, அம்மாவுக்குத் தெரியும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.''

- சமரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ