Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரி அனந்தன் அ.தி.மு.க.வில் இணைகிறாரா ?

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்...முன்னாள் எம்.பி....சிறந்த பேச்சாளர்...காந்தி பேரவையின் தலைவர்..நாடார் சமூகத்தின் மூத்த தலைவர்...என்றெல்லாம் அழைக்கப்படுகிறவர் குமரிஅனந்தன். தமிழக காங்கிரஸின் வர்த்தகப் பிரிவின் தலைவரான வசந்தகுமாரின் அண்ணன், தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசையின் தந்தையார். குமரி ஆனந்தனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம். பொது விஷயங்களுக்காக பல முறை தமிழகத்தில் நடைப் பயணம் மேற்கொண்டவர். தற்போது 83 வயதானலும், காங்கிரஸ் கூட்டங்களில் உற்சாகமாக பங்கேற்று வந்தார்.இந்த நிலையில் சிலமாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் கங்கைப் பயணம் நிகழ்ச்சியில் குமரி அனந்தன் கலந்துக் கொண்டார் .அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.எம்.பி. தருண் விஜய்,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் கலந்து கொண்டனர் .அப்போதே பா.ஜ.க.எம்.பி.யான தருண்விஜயை பாராட்டி பேசினார் அப்போதே அரசியல் வட்டாரத்தில் செய்தி பரவியது. குமரிஅனந்தன் விரைவில் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார் என்று. 
இந்த நிலையில் குமரிஅனந்தன், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு  வருகிறார் என குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு குமரி ஆனந்தன் நேரிடையாக சென்றுள்ளார். அங்குள்ள நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனின் போன் நம்பரை குமரி அனந்தன் கேட்டாராம். தற்போது காங்கிரஸில் ஆக்டிவ்வான எந்த பொறுப்பும், உரிய மரியாதையும் குமரிஅனந்தனுக்கு கொடுக்கபட வில்லை எனவே குமரிஅனந்தன் ஜெயலலிதாவை சந்தித்து  அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸார் சொல்கிறார்கள்.

இது குறித்து பேச குமரிஅனந்தனை தொடர்பு கொண்டோம். முதலில் கருத்து சொல்ல மறுத்தார்.பின்னர் அழைத்து கேட்ட போது பேச தயங்கியவர். ஒரு அட்ரஸ் வாங்குவதுக்கு அ.தி.மு.க. ஆபீஸ் போனேன் என்றார்.

தி.மு.க., தா.மா.க, ம.தி.மு.க., தே.மு.தி.க.என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வில் சேர்ந்து பெரிய பொறுப்புகளையும், பதவிகளையும் பெற்று வருகிற நிலையில் காங்கிரஸுன் மூத்த தலைவரான குமரிஅனந்தன் அ.தி.மு.க. கூடாரத்துக்கு தாவிவிடுவாரோ என்று காங்கிரஸ் வட்டாரத்தில் செய்தி பரவிக்கிடக்கிறது. அதே நேரம், நாடார் சமூகத்தை சேர்ந்த எம்.பி-யான சசிகலா புஷ்பா தற்போது ஜெயலலிதாவுக்கு தலைவலியாக இருக்கறார். நாடார் சமூகமே அவர் பக்கம் நிற்பதாக முழங்கி வருகிறார். இந்த நேரத்தில் அ.தி.மு.கழகம் தரப்பில் நாடார் சமூகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு வலை விரித்துள்ளது. அந்த வலையில் குமரி ஆனந்தன் சிக்குவாரா? என்று அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். 

த.ராம்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ