Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லையில் போர் மேகம்... டெல்லியில் பதற்றம்..!

 


பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான உயர்மட்ட  ஆலோசனை கூட்டங்கள் டெல்லியில் ஆங்காங்கே நடத்து வருகின்றன. 'இது பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக அல்ல. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிரான போர்' என்பதை வெளிநாடுகளுக்கு ஆங்காங்கே உள்ள இந்திய தூதுவர்கள் மூலம் தகவல் சொல்லிவருகின்றனர். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தியாவின் அதிரடி பற்றி முறையீட்டு வருகிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விமானப்படை தாக்குதல் நடத்த டெல்லியில் கடைசிகட்ட ஆலோசனை நடக்கிறது. 


காஷ்மீர் மாநிலம் யூரியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் இறந்தனர். பாகிஸ்தானில் இருந்தபடியே இந்தியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றும் ஜெய்-இ-முகமது இயக்கத்தினர் யூரி தாக்குதலை நடத்தியதாக இந்திய மிலிட்டிரி ஆப்ரேஷன் டைரக்டர் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், யூரி சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அதே பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். 


இவ்வளவு நடந்தும், பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை எடுக்காமல் வெறும் ஆலோசனை அளவில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதை டெல்லியில் உள்ள எதிர்கட்சியினர் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள். 'பாகிஸ்தானை எச்சரிப்பதும், அவர்கள் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தாக்குதல் நடத்துவதும் கடந்த பல வருடங்களாகவே நடந்து வருகிறது. இந்த முறை இரும்புக்கரம் கொண்டு பாகிஸ்தானை அடக்கவேண்டும்' என்று பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையடுத்துதான், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்க இந்திய உயர் அதிகாரிகள் க்ரீன் சிக்னல் தந்துள்ளனர். 


ராணுவம், உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவான 'ரா' அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பாகிஸ்தான் பகுதியில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் முகாமிட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்கட்டமாக இந்திய விமானப்படை மூலம் தாக்கி அழிக்க தயாராகிவருகிறது இந்திய ராணுவம்.

 


இந்திய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பலுசிஸ்தானத்தில்,  மனித உரிமையை பாகிஸ்தான்  மீறி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இது உலக அளவில் விமர்சனத்தை கிளப்பிவிட்டது. மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாதிகளை ஏவி விட்டு தாக்குதல் நடத்திவருவதாக கூறப்படுகிறது. 


இதற்கிடையில், சில வடமாநிலங்களில் 2017-ம் வருடம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா...இங்கெல்லாம் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதில் ஒட்டு வங்கியை கவர இந்தமாதிரி தாக்குதலை நடத்த பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. 'ஏற்கனவே கார்கில் போரை நடத்தி ஆட்சியை பி.ஜே.பி. பிடித்ததை மறந்துவிடக்கூடாது. அதே பாணியில் தற்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தேர்தலில் ஜெயிக்க திட்டமிட்டு வருகிறது பி.ஜே.பி' என்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனங்களை துவக்கியுள்ளனர். 


- ஆர்.பி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ