Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்கொலைக்குத் தள்ளிய 35 லட்சம் பேரம்! உள்ளாட்சி உள்குத்து


கவுன்சிலர் சீட் கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு அ.தி.மு.க வட்டச் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதன்முதலில் அ.தி.மு.க வெளியிட்டது. இந்த பட்டியலில் மாவட்டச் செயலாளருக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கட்சியினர் சொல்கின்றனர். இந்நிலையில் விருகம்பாக்கம், குமரன்நகர் 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், அ.தி.மு.கவில் 127வது வட்டச் செயலாளராக உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் இவர் கவுன்சிலருக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறையும் சீட் கிடைக்காததால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இன்று அதிகாலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இதுகுறித்து சேகரின் மகன் கமலேஷ் கூறுகையில், "என்னுடைய தந்தை சேகர், கடந்த 87ம் ஆண்டிலிருந்து கட்சியில் இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக 127வது வட்டச் செயலாளராக உள்ளார். கவுன்சிலர் சீட், கேட்டு விருப்ப மனு கொடுத்தார். அப்போது 25 லட்சம் ரூபாயிலிருந்து 35 லட்சம் ரூபாய் வரை மாவட்டச் செயலாளரிடம் கொடுத்தால் கவுன்சிலர் சீட் கிடைத்துவிடும் என்று பகுதி செயலாளர் மலைராஜன் உறுதி அளித்துள்ளார். ஆனால், கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில் பகுதி செயலாளர் மலைராஜனின் பெயர் உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மலைராஜனே போட்டியிட்டு கவுன்சிலரானார். இந்த முறை அவர் 50 லட்சம் ரூபாய் கொடுத்து சீட் வாங்கியதாக சொல்கிறார்கள். சீட் கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவரது நிலைமை மோசமாக உள்ளது"என்றார்.


இதுகுறித்து விருகம்பாக்கம் பகுதி செயலாளர் மலைராஜனிடம் பேசினோம். "சேகருக்கு புட்பாய்சன். அவர் நலமாக இருக்கிறார் என்றவரிடம், பணம் விவகாரம் தொடர்பாக கேட்டதற்கு பணம் கொடுத்து அ.தி.மு.கவில் சீட் வாங்க முடியுமா, நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதுபோல நானும் பணம் கொடுத்து சீட் வாங்கவில்லை. அ.தி.மு.கவில் 22 ஆண்டுகளாக இருக்கிறேன். இது எல்லாம் உண்மைக்கு புறம்பான தகவல்"என்றார்.

எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close