Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.க-வில் விழுந்தது இன்னுமொரு விக்கெட்..!

தேமுதிகவில் இன்னுமொரு விக்கெட் விழுந்துள்ளது. தேமுதிகவின் திருப்பூர் மாவட்ட செயலாளரான தினேஷ்குமார், திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி இன்று காலை மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவில் இணைத்துக்கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் அணி சேர்ந்து போட்டியிடுவது என அறிவிக்கப்பட்டபோது, தேமுதிகவில் இருந்து விலகி, பலர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மிக மோசமான தோல்வியை சந்திக்க... தேர்தலுக்கு பின்னரும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தேமுதிகவின் நிர்வாகிகள் இடம் மாறினர். பல மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் விலகி வந்த நிலையில், இப்போது அடுத்த விக்கெட். தேமுதிகவின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார்.

சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெளிப்பட்ட போது, முதலில் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தினேஷ்குமார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது மாவட்ட நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்துள்ளார் தினேஷ்குமார். ஸ்டாலினை சந்தித்து, கட்சியில் இணைத்துக்கொண்ட தினேஷ்குமார், விரைவில் கொங்கு மண்டலத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான விழாவுக்கு ஸ்டாலினிடம் தேதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தினேஷ்குமார் கூறுகையில், "நான் தேமுதிக துவங்கியது முதல் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். 3 முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். ஆனால் கட்சியின் செயல்பாடு தொண்டர்களுக்கானதாகவும், மக்களுக்கானதாகவும் இல்லை. கடைசியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரை விவாதித்து பார்த்து விட்டோம்.  இந்த முறை சற்று கடூமையாகவே பேசினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இயக்கத்துக்காக உழைத்த தொண்டர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிற்றது.விரைவில் கொங்கு மண்டலத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை மாற்றி அதை திமுக கோட்டையாக்கி காட்டுவோம். உள்ளாட்சி தேர்தல் என்பதால் பதவிக்காக நான் இப்போது திமுகவில் சேரவில்லை. அது தொடர்பாக நான் கேட்கவும் இல்லை. திமுகவில் சேர்ந்ததில் எனக்கான கோரிக்கை என எதுவுமில்லை," என்றார்.

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீண்டு வந்து விட வேண்டும் என அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், தொடரும் நிர்வாகிகள் பதவி விலகல்கள் கட்சியை மேலும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வருவது தான் பரிதாபம்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ