Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னை தொந்தரவு செய்யாதீங்க...! மகன் பிறந்த நாளில் தனித்திருந்த அழகிரி!

மதுரை : தனது மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளான இன்று  வீட்டில் இருக்க பிடிக்காமல், கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் விக்கிரமங்கலத்தில் உள்ள தன் பண்ணை வீட்டுக்கு சென்று தனிமையில் ஓய்வெடுத்தார் மு.க.அழகிரி.

மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாள் இன்று. அழகிரியின் மகன் என்றால் சும்மாவா?.  மதுரை மாநகரமெங்கும் துரைதயாநிதியை வாழ்த்தி விதம் விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் வழக்கமான உற்சாகம் மட்டும் மிஸ்ஸிங்.
துரை தயாநிதியின் பிறந்தநாளையொட்டி, இன்று காலையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கினார்கள். நலத்திட்ட உதவிகளை செய்தனர். ஆனால் வழக்கமான கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. துரை தயாநிதி சென்னையிலேயே இருந்தார். மதுரை வரவில்லை. மதுரை வர திட்டமிட்டிருந்த துரை தயாநிதியை வர வேண்டாமென சொல்லி விட்டாராம் அழகிரி.

தன் மகன் பிறந்த நாளை குடும்பத்தினரோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட முடியாததில் அழகிரிக்கு ஏக வருத்தம். கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது.. ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்து தர முடியாதது.. என மிகுந்த கவலையோடு தான் நாட்களை கடத்தி வருகிறார் அழகிரி. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த தேர்தலிலும் தனது ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்து தர முடியாத சூழல் தொடர்வதால் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கும் அழகிரி, இன்று மகன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் மதுரையருகே விக்கிரமங்கலத்திலிருக்கும் தன் பண்ணை வீட்டுக்கு சென்று தனிமையில் ஓய்வெடுத்தார்.  அழகிரி பண்ணை வீட்டுக்கு செல்லும் சேதி தெரிந்து உடன் கிளம்பிய ஆதரவாளர்களிடம், 'என்னை தொந்தரவு செய்யாதீங்க' என்று அவர்களை கட் பண்ணிவிட்டு டிரைவர் மற்றும் உதவியாளருடன் காலையில் கிளம்பி சென்றார்.

அழகிரியைப்ப்போல அவரது ஆதரவாளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். "ரெண்டு வருஷம் ஓடிருச்சு. அண்ணனை திரும்பவும் கட்சியில இணைச்சுக்குவாங்களா? இல்லை கடைசி வரை இப்படித்தானானு தெரியலை,"என்கின்றனவர் அவர்களது ஆதரவாளர்கள்.
"நாங்க இப்போதும் திமுகதான். அண்ணன் எவ்வளவோ இறங்கி வந்துட்டார். ஆனால் கட்சியில சேக்காம, சென்னையில் சில பேர் முட்டுக்கட்டை போட்டு வர்றாங்க. இப்போ அதிமுக மேல மக்கள் கடுமையான வெறுப்புல இருக்காங்க. உள்ளாட்சி தேர்தல்ல அண்ணனை மட்டும் சரியாக பயன்படுத்தினா எல்லா மாநகராட்சி, நகராட்சிகளையும்  சுலபமாக கைப்பற்றிடலாம். ஆனால் திமுக தோத்தாலும் பரவாயில்லை, அண்ணனை மட்டும் கட்சியில் சேர்க்க கூடாதுன்று சிலர் நினைக்கறது தான் சிக்கலா இருக்கு. அண்ணன் சீக்கிரம் ஒரு முடிவெடுப்பார்," என அழகிரியின் அடுத்த மூவ்க்கு காத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

- செ.சல்மான்.
படம் : வீ.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ